“குளத்தூர் இரட்டை கொலை” பெண்ணின் தந்தை கைது..!!

தூத்துக்குடியில் காதல் தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக 24 வயதான சோலைராஜ்  மற்றும் 21 வயதான ஜோதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் தரப்பில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்  குளத்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அங்கிருந்த தம்பதிகளை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. பலத்த வெட்டு காயத்துடன் தம்பதிகள் சம்பவ இடதிலேயே உயிரிழந்தனர்.  இத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பளார் இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும்,எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால் கொன்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.