நான் ஒரு தொழிலதிபர்…. 20 பெண்களை ஏமாற்றிய நபர் கைது.!!

உத்தரபிரதேசத்தில் தான் ஒரு தொழிலதிபர் என கூறி 20 பெண்களிடம் பண  மோசடி செய்து வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் தமிஜா (வயது 46) வாகனத்தின் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகின்றார். ஆனால் இவர் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதாவது இணையதளத்தில் உள்ள திருமண தகவல் பக்கங்களில் இணைந்த இவர் தான் ஒரு தொழிலதிபர் என பதிவேற்றம் செய்து பெண்களை ஏமாற்றி இவரது வலையில் வீழ்த்தி நெருக்கமாக பழகி வந்துள்ளார். தாம் ஆண்டுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் ஒரு தொழிலதிபர் எனகௌரவ் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளார். இப்படி அவர் பெண்களிடம்  பேசி அறிமுகமாகி  ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.

Image result for Gaurav Dhamija was arrested after one of the women he had cheated filed a complaint ... A man was arrested from Meerut in Uttar Pradesh for allegedly cheating

இந்நிலையில் சந்தேகம் அடைந்த ஒரு பெண் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன்கள் பல சிம் கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்  முக்கியமாக விவாகரத்தானவர்கள் விதவைகள் போன்றவர்களே குறிவைத்து கௌரவ்  ஏமாற்றி தனது வலையில் வீழ்த்தி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.