“வாகன சோதனை என்ற பெயரில் விபத்தை ஏற்படுத்திய காவல்துறை “திருவாரூரில் பரபரப்பு !!…

திருவாரூர் மாவட்டத்தில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அவருடைய உறவினர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சை பின்தொடர்ந்தார் ஹரிஹரன் . திருவாரூர் அருகே காட்டாறு பாலம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஹரிஹரனை காவல்துறையினர் வழிமறித்தனர் இதனால் நிலைதடுமாறிய ஹரிஹரன்  வேகத்தடை மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு அவர் உறவினர் சென்ற அதே ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதன்பின் காவல்துறையினரின் இச்சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்த உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கூறியுள்ளனர் இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.