அமெரிக்காவில் பாம்பு ஒன்று மிக கடுமையான பசியால் அதன் வால் பகுதியை விழுங்கிய வினோதமான நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிரண்ட் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் ‘கிங் ஸ்நேக்’வகை பாம்பு ஒன்று பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது இந்த பாம்புக்கு தீராத பசி ஏற்பட்டதையடுத்து இருப்பிடத்தில் உணவு ஏதும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தனது வாலை சாப்பிட தொடங்கியது.

இதனை பார்த்த சரணலாயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர், உடனே பாம்பின் மூக்கு பகுதியில் கைகளால் லேசாக தட்டிக்கொடுத்து, அது விழுங்கிய அதன் வாலை வெளியே வாயிலிருந்து வெளியே எடுக்க செய்தார்.
இந்த காட்சியை முகநூலில் பதிவிட்ட ரோத்தக்கர், இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘கிங் ஸ்நேக்’ வகை பாம்புகள் பிற வகை பாம்புகளை உண்ணும் தன்மை கொண்டது. ஆனால் சில நேரத்தில் அதன் வால் பகுதியை வேறு பாம்புடைய மிச்ச பகுதி என தவறாக நினைத்து அதனை விழுங்கும் எனவும், பாம்பு தனது வாலை விழுங்கியபோது, அதன் மூக்கில் தட்டி அதற்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வாலை விடுவித்ததாகவும் அவர் கூறினார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.இந்த காட்சியை சிலர் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்து வருகின்றனர்.