ஒரே கடியில் “தர்பூசணியை” தெறிக்க விட்ட முதலை… வைரல் வீடியோ..!!

அமெரிக்காவில், ஒரு  முதலை ஒரே கடியில்  தர்பூசணியை கடித்து சுக்குநூறாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரக பரவி பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடோ மாநிலத்தில் உள்ள ஒரு முதலை பண்ணையில், ‘பாம்பர்’ என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வரும்  மிகப்பெரிய முதலை ஓன்று அண்மையில் நீரிலிருந்து   வாயை திறந்தபடி கரையை நோக்கி வந்தது.

Image result for The video, released by NBC Montana on Facebook features Bomber,

இதனை கண்டவுடன் அந்த விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர் சிறிது தூரத்தில் இருந்தபடி, பெரிய அளவிலான ஒரு தர்பூசணி பழத்தை முதலையை நோக்கி வீசினார். அதனை முதலை லாவகமாக வாயில் கவ்விக்கொண்டு சில நொடியில் தனது மேல் தாடை உதவியுடன் அதனை ஒரே கடியில் சுக்குநூறாக உடைத்துவிட்டு நீருக்குள் சென்றது.

Image result for American Alligator #Americanaligatoreatswatermelonviralvideo

முதலை கடித்து நொறுக்கிய இந்த வீடியோவை முகநூலில் பதிவிட்ட பூங்கா நிர்வாகம், பிற விலங்குகளை காட்டிலும், முதலைகள் எந்தவொரு பொருளாக இருந்தாலும் சரி  வலிமையான சக்தியுடன் கடித்து நொறுக்கும் திறன்கொண்டது என குறிப்பிட்டிருந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.