பொல்லார்ட் மரண அடி…. காணாமல் போன கே.எல் ராகுல் சதம்…..மும்பை அணி அதிரடி வெற்றி..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்து வென்றது 

ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்தினார்.  டாஸ் வென்ற வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 197 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 64 பந்துகளில் 100* ரன்கள்  (6 சிக்ஸர், 6 பவுண்டரி) விளாசினார். மேலும் கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் 63 ரன்கள் (7 சிக்ஸர், 3 பவுண்டரி) விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும், பெஹெரெண்டாரா ஃப், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டி காக்கும், சித்தேஷும் களமிறங்கினர். தொடக்கத்தில் சிக்ஸர் அடித்த சித்தேஷ் அதன் பின் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 21 ரன்னில் ஆட்டமிழக்க அதை தொடர்ந்து  குவிண்டன் டி காக்கும்  24 ரன்னில்  ஆட்டமிழந்தனர். இதையடுத்து கெய்ரன் பொல்லார்டும், இஷான் கிஷனும் ஜோடி சேர்ந்தனர். பொல்லார்ட் வந்த உடனே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இஷான் கிஷன் 7 ரன்னில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

அதன் பின் வந்த ஹர்திக் பாண்டியா 19 ரன்களிலும், க்ருனால் பாண்டியா 1 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். இதையடுத்து வந்த அல்சாரி ஜோசப், பொல்லார்டுக்கு கம்பேனி கொடுக்க பொல்லார்ட் ருத்ர தாண்டவத்தில் இறங்கினார். இறுதியில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட முதல் பந்தை அங்கித் ராஜ்புட் நோபால் வீச அந்த பாலை பொல்லார்ட் சிக்ஸர் அடித்தார். அடுத்து முதல் பந்தில் பவுண்டரி அடித்து 2 வது பந்தில் போலார்ட் 31 பந்துகளில் 83 ரன்கள் (10 சிக்ஸர், 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் பரபரப்பாக இருந்தனர்.

அப்போது அல்சாரி ஜோசப்பும், சாஹரும் சிங்கிள் சிங்கிளாக ரன்கள் எடுத்தனர்.இறுதியில் 1  பந்தில் 2 ரன்கள் தேவைப்பட அல்சாரி ஜோசப் 2 ரன்கள் எடுத்து வெற்றியை தேடி தந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  அல்சாரி ஜோசப் 15* ரன்னிலும்,  ராகுல் சாஹர் 1* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளும், அங்கித் ராஜ்புட், அஷ்வின், சாம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.