கடையை உடைத்து ரூ 2,00,000 மதிப்புள்ள பொருள்கள் திருட்டு….. மர்ம நபர்கள் கைவரிசை…!!

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள சாமிரெட்டி பகுதியில் வாடகை கட்டிடத்தில் கடை நடத்தி வருபவர் மனாராம். எலக்ட்ரிக் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்த இவர் சம்பவத்தன்று  காலை வழக்கம் போல கடையை திறக்க  சென்றார். அப்போது  கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனாராம் பின்னர் கடைக்குள்  சென்று பார்த்தபோது  கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு  அதில் இருந்த ரூ.47 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்சார வயர்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து மனாராம்  போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில்   சம்பவ இடத்திற்கு  வந்த போலீசாரும் கொள்ளை போன இடத்தை ஆய்வு நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின்  கைரேகைகளை சேகரித்தனர். கடையின் பூட்டு உடைத்து கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது . கொள்ளை சம்பவம் தொடர்பாக  கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரித்து வருகின்றனர்.