7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில், 1 மணி வரை 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் .7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 7மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார் (8), ஜார்கண்டில் (3), சண்டிகார் (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப்பில் மொத்தமுள்ள (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்டதேர்தல் நடைபெற்று வருகிறது.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 1 மணி நேர நிலவரப்படி, 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
1. பீகார் – 36.20%
2. இமாச்சல் பிரதேசம் – 42.38%
3. மத்திய பிரதேசம் – 45.81%
4. பஞ்சாப் – 37.86%
5. உத்தரபிரதேசம் – 37%
6. மேற்குவங்கம் – 49.79%
7. ஜார்கண்ட் – 52.89%
8. சண்டிகர் – 37.50%
வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.