தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவை நேற்று முன்தினம் அமல்படுத்தி, அததியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் வலியுறுத்தியது. இருப்பினும், நேற்று பல நகரங்களில் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடினார்கள். அவர்களை காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். சில இடங்களில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதங்கள் செய்தனர்

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 70 வழக்குகள், திருச்சி மாநகரில் 25 வழக்குகள், தேனி மாவட்டம் போடியில் 5 கடை உரிமையாளர்கள் உட்பட பல்வேறு இடங்களில் மொத்தம் 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னையில்  நேற்று காவல்துறை ஆணையர் 144 தடை உத்தரவை மீறினால் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அந்த உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொது மக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *