தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று சென்னையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம்  வாட்டி வதைக்கிறது . இதனால்  வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . நாளுக்குநாள் வெப்பம்  அதிகமாகி வருவதால் தங்களுடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர் . குறிப்பாக பழச்சாறு விற்பனை சூடு பிடித்திருக்கிறது .

Image result for வெப்பம் அதிகரிக்கும்

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை  ஆய்வு மையம் கூறியிருக்கின்றது . கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை என்றும், சென்னையை பொறுத்தவரையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்   தெரிவித்துள்ளது.