“விளையாட்டு வினையானது” குடிபோதையில் நடந்த விபரீதம்…!!

குடிபோதையில் தூக்கு போட்ட மாதிரி நண்பருக்கு வீடியோ கால் மூலம் நடித்துக்காட்டிய இளைஞர் கயிறு இறுகி உயிரிழந்தார்.

திருப்பதி அருகே திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் மதுபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் மூலம் தூக்கு போட்டு நடித்துக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு இறுகியதில் ஷங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்பு தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஷங்கரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக நடித்துக்காட்டியது விபரீதத்தில் முடிந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.