“மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் அடித்து கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் …”நிலவும் தொடர் தேர்தல் பதட்டம் !!..

பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததன் காரணமாக  சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் வசித்து வசித்து வருபவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவர் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் ஒரு மகன் மகள் என்று ஒரு அழகான குடும்பம் உள்ளது தற்பொழுது குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக தனிமையில் இருந்து வந்தார் கோவிந்தராஜ்

இவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்ததன் காரணமாக மக்களவை தேர்தலில் பாஜக விற்கு ஓட்டு போடுமாறு பார்க்கும் அனைவரிடமும் கூறி வந்தார் இந்தப் பிரச்சாரத்தை இவர் தனி மனிதனாக இருந்து நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அருகே அண்ணா சிலை இருக்கும் இடங்களில் உள்ள கடைகளில் மோடிக்கு ஆதரவாக அவரது புகைப்படத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார்
அப்பொழுது அங்கு வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் கோபிநாத் என்பவர் மோடிக்கு ஆதரவாக எப்படி பிரச்சாரம் செய்யலாம் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த கோபிநாத் கோவிந்தராஜை சரமாரியாக தாக்கினார் உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை தடுத்தனர் இந்நிலையில் வலி தாங்கமுடியாமல் கதறிய கோவிந்தராஜை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர் இதனையடுத்து சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜன் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் ஒரத்தநாடு காவல் அதிகாரிகள் கோபிநாத் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக தனிமனிதனாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது