“சிறுவனுக்கு நடந்த பாலியல் கொடூரம் “திருநெல்வேலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..!!

திருநல்வேலி மாவட்டத்தில்  இளைஞர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரமாக கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

திருநெல்வேலியை அடுத்த குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அடிக்கடி தனது மொபைல் போனில் டிக் டாக் வீடியோவை காட்டி ஆசை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் வீடியோ காட்டுவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

சிறுவன் சத்தம் போட்ட காரணத்தினால் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்து உள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு  மாயாண்டியை கைது செய்து உள்ளனர். தற்பொழுது கொலைகாரனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.