“பட்டாசு ஆலையில் வெடி விபத்து “2 பேர் படுகாயம் ..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் .

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை  முழுவதும் எரிய தொடங்கியது.

Image result for பட்டாசு ஆலை விபத்து

இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. அதில் உடனடியாக தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் முதலில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை மீட்டு சாத்தூர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டதை அடுத்து      தற்போது இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின் இரண்டு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.