“பருவமடைந்த மாணவிகளுக்கு கல்வி கற்க தடை” பெற்றோர்கள் அதிர்ச்சி ..!!

அரசு பள்ளி சேதமடைந்ததால் கோவிலில் வைத்து கற்றுக்கொடுக்கப்படும் கல்வியை கற்க பருவமடைந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை  என்று கோவில் நிர்வாகம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி கூடம் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதே பள்ளியறையில் வகுப்புகள் தொடர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அருகில் உள்ள கோவில் வளாகத்தில் பாடங்களை நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்து .

Image result for பள்ளி மாணவிகள்

தற்பொழுது வகுப்புகள் கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. வயதிற்கு வந்து பருவமடைந்த பெண்கள் கோவில் வளாகங்களுக்குள்  கல்வி கற்க அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. திடீரென்று விதிக்கப்பட்ட தடையால் மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 65க்கும் மேற்பட்ட மாணவிகள் இதனால் பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டனர் .இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.