மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறத்து என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த தலைவர்களான ஸ்டாலின் வைகோ ஆகியோருக்கு நன்றி, மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் அதற்கான நடைமுறைகளை விசிக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று அவர் பேசினார்.

மேலும் மோடி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட ஆரம்பித்தனர். இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறது என்று திருமாவளவன் பேசியுள்ளார் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.