“நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது சரியானது தான்”எஸ்.வி.சேகர் கருத்து ..!!

சட்ட ரீதியாக  எந்த நிகழ்வும் நடிகர் சங்கத்தில் நடைபெறவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிட இருந்தன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் நாடகம் நடத்துவதால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது.

Image result for s v sekar

இதனையடுத்து பஞ்சபாண்டவர் அணி சார்பில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனை அடுத்து பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர்  இதுகுறித்து கூறியதாவது, நடிகர் சங்கம் ஆனது ஒரு முறை கேடான சங்கம் அதில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்று உள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் நிறைய நிலங்களை சட்டத்திற்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் நடிகர் சங்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை ஆகையால் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியான முடிவுதான் என்று அவர் கூறியுள்ளார்