“தன் உயிரை கொடுத்து 10 தொழிலாளர் உயிரை காப்பாற்றிய வேண் டிரைவர் “சோகத்தில் தொழிலாளிகள்!!..

கீரமங்கலம் பகுதியில் தன உயிரை கொடுத்து 10 தொழிலாளர்களை வேண் டிரைவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் குளமங்கலம் போன்ற கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வயல்வெளிகளுக்கு சென்று பணிபுரிந்து வருவது வழக்கம் இந்நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அப்பகுதிகளில் வரக்கூடிய சரக்கு வேனில் ஏறி சென்று பணியை முடித்துவிட்டு திரும்பி வருவர் இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 10 பெண் தொழிலாளர்கள் அவர்கள் ஊரிலிருந்து வடக்குப் பகுதியை நோக்கியுள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு புறப்பட்டு சென்றனர்

அப்போது அவ்வழியாக சரக்கு வேனை ஓட்டி வந்த அன்பழகன் அவர்களை தனது வேனில் ஏற்றிச் சென்றார் அப்பொழுது ஆற்றுப் பாலம் வழியாக சென்று கொண்டிருந்த பொழுது அன்பழகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது இந்நிலையில் தடுமாறிய போதிலும் அதனை நிதானமாக நிறுத்தி விபத்து ஏற்படாமல் பெண் தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றி யுள்ளார் அதன்பின் மயங்கிய நிலையில் இருந்த அன்பழகனை அதே வேனில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார் இதனையடுத்து தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்கள் ஆகிய எங்களது உயிரை காப்பாற்ற அவரது உயிரைய கொடுத்துவிட்டார் என்று பெண் தொழிலாளர்கள் கதறி அழுதுள்ளனர்