“கோடை தாகத்தை தணிக்க இலவச குடிநீர் வழங்கும் காவல்துறை அதிகாரி “பொதுமக்கள் பாராட்டு !!..

கோடை வெயிலை தணிக்கும் வகையில் இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மற்றும் குடிநீர் பிரச்சனைகளாலும் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி மணிகண்டன் பொதுமக்கள் அவதி படுவதை கண்டு தனது சொந்த செலவில் தனது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் சேவையை தொடங்கி வைத்து உள்ளார்

இதனையடுத்து நாளொன்றுக்கு ஐந்து பெரிய கேன்களுக்கு  மேல் தனது சொந்த செலவில் வாங்கி இலவசமாக தண்ணீர் வழங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார் அவரது இந்த சேவையானது பொதுமக்களிடம் பெரிய அளவிலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது