“ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் NGK திரைப்படத்தின் இமோஜி “ரசிகர்கள் மகிழ்ச்சி !!..

என்.ஜி.கே திரைப்பட வெளியிடை முன்னிட்டு திரைப்படக்குழு இமோஜி ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன்  நடிகர் சூர்யா rakul-preet-singh சாய் பல்லவி ஆகியோரைக் கொண்டு என் ஜி கே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் வரவிருக்கும் இத்திரைப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக 200 அடிக்கும் மேல் சூர்யாவிற்கு கட் அவுட் வைத்து சாதனை படைக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில்  மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் என் ஜி கே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள சூர்யாவின் புகைப்படத்தை அப்படியே crop செய்து அதை ட்விட்டரில் இமோஜி ஆக மாற்றி படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இமோஜி குறித்தும், என் ஜி கே படம் குறித்தும், கூறினார் . மேலும் என் ஜி கே படம் தொடர்பான அனைத்து #hashtag களுக்கும்  தனித்தனி இமோஜிகள் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார் .இந்த இமோஜியானது தற்பொழுது ட்விட்டர் பக்கத்தில் அதிக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *