“அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் “வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ..!!

தமிழகத்தின் ஒரு சில  மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை ,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்  வெப்பச் சலனம் காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for heat increased

திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏழு செண்டி மீட்டர் மழையும் திண்டிவனத்தில் அறிந்து சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ,இன்றும் நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.