மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்..!!

மகனுடன் சேர்ந்து தாயும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது .

ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி . இவர் தனது பத்தாம் வகுப்பு படிப்பை படித்து கொண்டிருக்கும் பொழுதே திருமணம் ஆகிய காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பின்பும் படிப்பை கைவிட்ட வருத்தம் அவர் மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது.

ஆகையால் அவரது மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் சேர்ந்து மகன் சொல்லிக்கொடுக்க தாயும் படித்து மகனுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து எழுதியுள்ளார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகி பசந்தி 203 மதிப்பெண்களும் அவரது மகன்  340 மதிப்பெண்களும் பெற்று  தேர்ச்சி அடைந்துள்ளனர்.