உக்ரைனில் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் தலைகீழாக தொங்கியபடி பயமில்லாமல் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைனில் சைய் (Shiey) என அழைக்கப்படும் ஒரு இளைஞர் உலகின் அடிக்கடி திகில் சாதனைகளை செய்து வருகிறார். இவர் பலஉயரமான மிக பெரிய கட்டிடங்கள், மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சிக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி சர்வசாதாரணமாக துளியும் பயமில்லாமல் நடத்தல் போன்ற காரியங்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான்.

இவர் சாகசம் செய்யும் போது அவரது நண்பரும் உடனிருப்பார். அவரது உதவியோடு முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் ஐரோப்பாவின் உயர்ந்த கட்டிடங்களில் சாதனை செய்த அந்த இளைஞர், தற்போது உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் ஒரு புதிய சாகசத்தை துளியும் பயமில்லா சாதனையை நிகழ்த்தியுள்ளான்.
கட்டிடத்தின் கைப்பிடிமானத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பியின் அடிப்பாகத்தில் தனது பாதங்களை விட்டு, பிடிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு, அருகிலிருக்கும் சுவரின் நுனி விளிம்பில் இருந்து ஆபத்தை துளியும் உணராமல் தலைகீழாக வௌவால் தொங்கியபடி பலவித போஸ் கொடுத்து செல்பி எடுத்து கீவ் நகரின் அழகைக் காட்சிப்படுத்தியுள்ளான். இந்த சாதனையை பார்க்கும் சிலர் பிரமிப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்க்கின்றனர். தற்போது இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.