இந்தியாவில் 271 பேர் கொரோனாவுக்கு பலி….. சோகம்….!!

இந்தியாவில் இன்று மட்டும் 56,211 பேருக்கு கூறுவதோடு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 271 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் அது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றினை இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95,855 ஆக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் 56,211 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 271 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதன்மூலம் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,114 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 1,13,93,021 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். உலக நாடுகள் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு மருத்துவ மனைகளிலும் 5,40,720 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இன்றுவரை 6,11,13,354 நபர்களுக்கு கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.