ஹோட்டலில் பெண்களுடன்…. உல்லாசமாக 3 நீதிபதிகள்… அதிரடி பணி நீக்கம்..!!

நேபாளத்தில் ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்த மூன்று நீதிபதிகளை மாநில பொது நிர்வாகத்துறை பணியிடம் நீக்கம் செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கிய பிகாரைச் சேர்ந்த 3 நீதிபதிகள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பொது நிர்வாகத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. நேபாள நாட்டில் விராட் நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போது அந்த ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் பிகார் மாநிலம், சமஸ்திபூர் குடும்ப நீதிமன்ற முதன்மை நீதிபதி ஹரி நிவாஸ் குப்தா, அராரியா மாவட்ட கூடுதல் நீதிபதிகள் ஜிதேந்திரநாத் சிங், கோமல் ராம் என்பது தெரிந்தது. இது குறித்து நேபாள செய்தித்தாளில் செய்தி வெளியானபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து பாட்னா உயர்நீதி மன்றம் மூவரிடம் விசாரணையை தொடங்கியது. அதில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப் பட்டதை அடுத்து அவர்கள் மூவரையும் பணி நீக்கம் செய்யப் பரிந்துரைத்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இவர்கள் மூவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பீகார் மாநில பொது நிர்வாகத்துறை திங்கட்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நீதிபதிகள் ஹரி நிவாஸ் குப்தா, ஜிதேந்திரநாத் சிங், கோமல் ராம் ஆகிய மூன்று பேரும் 2014 பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், ஓய்வுக்குப் பிந்தைய அனைத்து சலுகைகளையும் அவர்கள் இழக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.