2007ல் உலககோப்பை நாயகன்… தற்போது உலக நாயகன்… முன்னாள் வீரரை புகழ்ந்த ஐசிசி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான சூழல் நிலவிவரும் நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் செயலை ஐசிசி பாராட்டியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 980க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸை தடுக்க தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவரும், தனது ஓய்வுக்குப் பின் ஹரியானா மாநிலத்தின் காவல் துணை கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்துவருபவருமான ஜோகிந்தர் சர்மா, தற்போது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்.
ICC lauds cricketer-turned cop Joginder Sharma for doing his bit ...

ஜோகிந்தர் சர்மாவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது. அதில், “2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் நாயகன், 2020இல் உண்மையான உலக நாயகன்.

இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா தனது கிரிக்கெட் ஓய்விற்குப் பிறகு காவல் துறையில் இணைந்து, தற்போது உலகமே சுகாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நேரத்தில் பொதுமக்களுக்காகத் தனது பணியை மேற்கொண்டுள்ளார்” என்று பதிவிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *