“குறைந்து வரும் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை “ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

பேஸ்புக் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளளது .

சமீபகாலமாக பேஸ்புக் நிறுவனமானது பொய்யான தகவல்களை தவிர்க்கவும், உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்கக்கூடிய பதிவுகளை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு விதிமுறைகள் கட்டமைக்கப்பட்டு பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அதிக அளவிலான நபர்கள் ஃபேஸ்புக் உபயோகிப்பதை தவிர்த்து வருவதாக பிரபல இ- மார்ட் நிறுவனம் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.