இங்கிலாந்தில் மின்மையத்திற்கு குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்ப்பு.!!

இங்கிலாந்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. 

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டுஷைர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் இந்த 3 கோபுரங்களை முற்றிலுமாக இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது.

Image result for Oxfordshire

அதன் படி 375 -அடி உயரம் கொண்ட அந்த 3 கோபுரங்களுக்கும்  வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன. அந்த 3 கோபுரங்களும்  சரிந்து கீழே விழுந்த நிலையில் தரையில் அதிக சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் இருந்த மின்கம்பங்கள் அனைத்தும் வெடித்து தீப்பற்றி எரிந்தன.

Image result for Oxfordshire cooling towers demolished

இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த சுமார் 40,000 -த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.