காதலியை கழுத்தறுத்து கொன்று… 45 நிமிடம் காரின் முன் இருக்கையில் அமர வைத்து பயணம் செய்த காதலன்!

துபாயில் இந்திய இளைஞன் ஒருவன் காதலியை கொன்று உடலை காரின் முன் இருக்கையில் அமரவைத்து நகரை சுற்றி வலம் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

துபாயில் இந்திய இளைஞன் இந்திய பெண்ணை 5 வருடமாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் மால் ஒன்றின் வெளியே காருக்குள் வைத்து இளைஞன் தன்னுடைய காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து துடி துடிக்க கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

Image result for Indian man in Dubai killed girlfriend, drove around city with her body in front seat

மேலும் காதலியின் சடலத்தை காரின் முன் சீட்டில் உயிரோடு இருப்பது போலவே செட்டப் செய்து  அமரவைத்து 45 நிமிடம் அந்த இளைஞன், துபாய் நகரை சுற்றி வலம் வந்துள்ளான். அத்துடன் ஒரு ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு பொறுமையாக தங்களிடம் வந்து சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Image result for In a gut-wrenching incident, an Indian man allegedly murdered his girlfriend in Dubai

வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் காதலியை கொலை செய்து விட்டதாக அந்த இந்திய இளைஞன் ஒப்பு கொண்டான். பின்னர் துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அந்த இளைஞன் சிறையில் அடைக்கப்பட்டான்.