“பிறந்த நாள் கொண்டாட சென்ற பெண்” துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது..!!

டெல்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வீட்டுக்கு  சென்ற 22 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். 

டெல்லியை சேர்ந்த 22 வயதுடைய  பெண் ஒருவர் நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அங்கு சில  நண்பர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சவான் என்ற இளைஞர் அப்பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு அங்குள்ள சிலரும் உதவியுள்ளனர்.

Image result for In Delhi, a young man has raped a 22-year-old girl

இதுகுறித்து அப்பெண் ராஜ் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையினர் சவான் மீது முதல் கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற நபர்களையும் கைது செய்வதற்கு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related image

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதேபோல ஜெய்ப்பூரில் 21 வயது பெண்ணை காரில் வைத்து பொம்மை துப்பாக்கியை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அப்பெண் நாக்கை கடித்து விட்டு தப்பி சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து ட்ரைவர் மற்றும் அவரது கூட்டாளி  இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.