இளைஞரை வெட்டியதில்… இருதரப்பினரிடையே மோதல்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லையில் முன்பகை காரணமாக இளைஞரை வெட்டிய சம்பவத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள முல்லை நகரில் பால முகேஷ்(19) ன்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பலமுகேஷ் அவரது நண்பர்களுடன் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பலமுகேஷை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பலமுகேஷ் உறவினர்கள் ஆத்திரமடைந்து கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள மற்றொரு தரப்பினரின் வீடு மற்றும் அங்கிருந்த வாகனங்களை கல்லால் எரிந்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் இளைஞனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலமுகேஷை தாக்கிய சங்கரலிங்கம் அவருடைய சகோதரன் அருண்பாண்டியன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வீடுகளை சேதப்படுத்திய மற்றொரு தரப்பை சேர்ந்த 40 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியதால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் இவர்களிடையே சில ஆண்டுகளாக முன் பகை இருந்து வந்ததாக நெல்லை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  இதனையடுத்து பலமுகேசை தாக்கிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *