பீகாரில் மூளை காய்ச்சலால் 100 குழந்தைகள் பலி… மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது 

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட  குழந்தைகள் அனைத்தும் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர்.

Image result for in-bihar-the-number-of-children-deaths-caused-by-brain-fever-has-increased-to-100

இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு 22-ம் தேதி வரையிலும், மேல் நிலை பள்ளிகளுக்கு காலை 10:30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இக்காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ள 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Image result for in-bihar-the-number-of-children-deaths-caused-by-brain-fever-has-increased-to-100

பலியான பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உடனே மருத்துவமனையில் சேர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.