இன்னும் சற்று நேரத்தில்…. தமிழக எல்லைக்குள் சசி என்ட்ரி…. பேனர்கள் அகற்றிய போலீசார்…!!

இன்னும் சற்று நேரத்தில் தமிழக எல்லைக்கு சசிகலா வரவுள்ள நிலையில் வரவேற்புக்கு வைக்கப்பட்ட பேனர்கள், பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருடைய காரில் அதிமுக கட்சி கொடி இருந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெங்களூரில் இருந்து இன்று சென்னை திரும்ப உள்ள சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் அதிமுக கொடி சசிகலா காரில் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் அவர் தமிழகத்திற்கு வரும் போது கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக எல்லையான ஓசூரில் ஜூஜூவாடிக்கு இன்னும் சற்று நேரத்தில் சசிகலா வரவுள்ள நிலையில் அவரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சசிகலா வரும்போது வெடிப்பதற்கான வைக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்த போலீசார் சசிகலா ஆதரவாளர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *