“2019-ல் பாமாயில் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும்”- வல்லுநர்கள் கணிப்பு..!!

பாமாயில் எண்ணெய் இறக்குமதி முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாமாயில் எண்ணெயை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் அர்ஜென்டினா பிரேசில் நாடுகளிடமிருந்து சோயா எண்ணெயையும், உக்ரைன் நாடுகளிடமிருந்து   சூரியகாந்தி எண்ணெயையும்  இந்தியா வாங்குகிறது.

Related image

தற்போது பாமாயில் எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் ஒரு டன் 34, 292 ரூபாயாக உள்ளது
எனவே 2018- 2019 சந்தைப்படுத்துதல் ஆண்டில் பாமாயில் இறக்குமதி கடந்த ஆண்டை காட்டிலும் 10 விழுக்காடு அதிகரித்து 96,00,000  டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய்க்கு எதிராக பாமாயில் எண்ணெய் இருக்கும் என்று வல்லுநர்கள்  கூறியுள்ளனர்