“திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இரண்டு பேர் மரணம் “போலீசார் தீவீர விசாரணை !!..

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 2 நபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி பகுதியை சேர்ந்தவர் தனராஜ். வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பொழுது தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வேலையாட்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அதேபோல் திண்டுக்கல் அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் காமாட்சி. திருப்பூரில் பணிபுரிந்து  வந்தார்.வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த அவர் இன்று காலை மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பழனிரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் காமாட்சி மீது மோதியது.மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியதில்  சம்பவ இடத்திலேயே காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவம் குறித்து  சத்திரம் பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.