பாரம்பரியம் தான் பெஸ்ட்….. சின்ன அலட்சியத்தால் 5,00,000 உயிரிழப்பு….. இனி இதை செய்யாதீங்க….!!

ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் செயல்படுவது குறித்து பிரபல யூட்யூப் சேனல் LMES ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காண்போம். 

பொதுவாக மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாகவே நமக்கு கிடைக்கப் பெற்ற அற்புதமான ஒன்று. இதனை பேணி பாதுகாத்தால் மட்டுமே நமது வாழ்நாள் நீடிக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது நமது உடலுக்குள் வரக்கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்துப் போராடக் கூடியது.

ஒருமுறை நமது உடலில் வரக்கூடிய இது போன்ற வைரஸ்களை நமது உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி போராடி வென்று விட்டால், மீண்டும் அதே வைரஸ் அல்லது பாக்டீரியா நமது உடலில் நுழையும் போது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்தக் கிருமிகளை நமது நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் உடனடியாகக் கண்டறிந்து கொல்வதற்கான திறன்களை வளர்த்து கொள்ளும்.  இது இயற்கையாக நடக்கக் கூடிய ஒன்று. உதாரணத்திற்கு அம்மை நோயை சொல்லலாம்.

ஒருமுறை அம்மை வந்து குணமடைந்தவர்க்கு  மீண்டும் வருவது  மிக மிக அரிது. தற்போது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் விதமாக நமது உணவு முறைகளில் நாம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால், கோழி வளர்ப்பில் ஆண்டிபயோடிக் வகை மாத்திரைகளை  கொடுத்து கோழி வளர்க்கிறோம். மீன்கள், ஆடுகள், மாடுகள் என பண்ணைகளில் வளர்க்கப்படும் பல உயிரினங்கள் இதேபோன்று ஆண்டிபயோடிக் மருந்து கொடுத்து வளர்க்கப்படுகிறது.

இதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி திறனில்  பாதிப்பு ஏற்படுகிறது. எப்படி என்று கேட்கும் பட்சத்தில், நமது நோய் எதிர்ப்பு சக்தி செல்லானது ஒவ்வொரு முறை புதிது புதிதாக வரக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடி அதற்கெதிராக தன்னை வடிவமைத்துக் கொள்ள கூடியது. எனவே எம்மாதிரியான கிருமிகளாக இருந்தாலும் அதனை அழித்துவிடும். ஆனால் ஆன்டிபயோடிக் மருந்துகள்  குறிப்பிட்ட பாக்டீரியா அல்லது வைரஸ்களை மட்டும் அழிக்கக்கூடியது. இதனை தொடர்ச்சியாக எடுத்து கொண்டால் நமது உடலும் ஆண்டிபயோடிக் போல் மாறிவிடும். 

ஒருவேளை சில  வைரஸ், பாக்டீரியா கிருமிகள் அன்டிபையோடிக் மருந்துக்கு எதிராக தன்னை உருமாற்றி வேறு ஒரு ரூபத்தில் உள்ளே நுழைந்தால் அந்த அன்டிபையோடிக் மருந்து அந்த வைரஸ் மற்றும் பாக்டீரியாவை  கட்டுப்படுத்தாது. தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை அல்லது ஆன்டிபயோடிக் மருந்து பயன்படுத்தப்பட்ட இறைச்சிகளை நாம் உண்ணும் போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், நமது உடலில் நோய் தொற்றும் அதிகரிக்க தொடங்கும். அடிக்கடி மருத்துவமனை செல்ல நேரிடும். மருத்துவமனைக்கு செல்ல நேரிடும் பட்சத்தில் அன்டிபையோடிக் மருந்து சாப்பிட்டால் குணம் அடைந்து விடுவோம் என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு. உதாரணத்திற்கு கொரோனா வைரஸ் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு மருந்து கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அது தன்னை உருமாற்றிக் கொண்டு வேறு ஒரு பரிணாம வளர்ச்சி அடைந்து மருந்திற்கு எதிராக செயல்படுகிறது.

இதன் காரணமாகவே அதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் ஒருமுறை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு   அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அரிது என  மருத்துவ ஆராய்ச்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் கொரோனா வைரஸுக்கு  எதிராக செயலாற்ற ஆரம்பித்திருக்கும்.

ஆனால் ஆண்டிபயோடிக் மருந்துகளை நாம் நம்பும் பட்சத்தில் அது நம்மை கைவிட்டுவிடும்.ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகள் மாத்திரைகளை நம்பி வைரஸ்களை விரட்ட நினைப்பதால் அவைகள் ரேசிஸ்டன்ட் வைரஸ்களாக உருமாறிவிடுகிறது. அதாவது அந்த ஆண்டிபயோடிக்  மருந்திற்கு எதிராக தன்னை மாற்றி அந்த மருந்துக்கு வேலை இல்லாமல் செய்துவிடுகிறது.

இதுபோன்ற ரேசிஸ்டன்ட் வைரஸ்களால் வருடத்திற்கு 5 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் நமது உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி தான் இந்த மோசமான நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கிறது எனவே இப்போதாவது புரிந்து கொள்வோம்,

நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே நமக்கு ஆகச் சிறந்த மருந்து அது நமது உடலில் சிறப்பாக செயல்பட்டால் நமக்கு மருந்து மாத்திரைகளே  தேவை இல்லை. நமது முன்னோர்கள் மருந்தே உணவு என்று கூறியது நமது உணவு முறையின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைத்திருந்தால் எந்த நோய்க்கும் மருந்து தேவையில்லை என்பதை நோக்கமாகக் கொண்டு தான். இதைப் புரிந்து நாமும் செயல்பட்டு நமது தலைமுறையினருக்கும் அதனை சொல்லிக்கொடுத்து வளர்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *