”இம்புட்டு வரி” போட்டா யாரு கட்டுறது…. திருவண்ணாமலையில் கடையடைப்பு …!!

திருவண்ணாமலை நகராட்சியில் வாடகை உயர்த்துவதற்கு கண்டனம் தெரிவித்து தற்போது வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சொத்து வரி , கடை வாடகை பல மடங்கு வரி உயர்த்தியுள்ள திருவண்ணாமலை நகராட்சியை கண்டித்து சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படுமென்று வணிகர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.  எனவே திருவண்ணாமலை நகராட்சியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறு வணிகர்களுக்கு 100 ரூபாய் என்றும் , பெரிய வணிகர்களுக்கு ஆயிரம் ரூபாய் என திருவண்ணாமலை நகராட்சி உயர்த்தி கட்டணங்களை வைப்பது மட்டுமின்றி , கட்டணங்களை வழங்காத கடைகள் மீது அடாவடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த கடையடைப்பு போராட்டத்தில் திருவண்ணாமலை முழுக்க உள்ள 33 சங்கங்களை சேர்ந்த,  நகை கடை மளிகை , காய்கறி கடைகள் உள்ளிட்ட 6000த்திற்கும் அதிகமாக ,  எந்த கடைகளும் இயங்காமல் காலை முதல் வெறிச்சோடி கிடக்கின்றனர்.

அதே போல தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நகராட்சியை கண்டித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற இருக்கின்றது. கடையடைப்பு போராட்டத்தால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.