நான் வாத்தா..? கஸ்தூரியிடம் பொங்கி எழுந்த வனிதா..!!

உருவத்தின் அடிப்படையில் வாத்து என்று கிண்டல் செய்கிறீர்களா? என்று கோவத்தில்  பொங்கி எழுந்தார்.

தமிழில் அனைவரையும் கவரும் கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று சீசன்களாக  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறையாமல் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வனிதா மீண்டும் உள்ளே சென்றபிறகு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் 58ஆம் நாளான இன்று, குட்டி குழந்தைகள் வேடமணிந்து அசத்தல் நடிப்பை பிக்பாஸ் பிரபலங்கள் வெளிக் காட்டி வருகின்றனர்.

Image result for வாத்து வனிதா

இதில் கஸ்தூரி டீச்சராக நடித்து வருகிறார். சேரன் பிரின்ஸ்பல் ஆகவும்  மற்றவர்கள் பள்ளி குழந்தைகளாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரி வாத்து பாடல் ஒன்றைப் பாட வனிதாவை அழைத்தார். அப்பொழுது வாத்து வாத்து பாடலை பாட வருகிறது என்று கூற என்னை உருவத்தின் அடிப்படையில் வாத்து என்று கிண்டல் செய்கிறீர்களா? என்று பொங்கி எழுந்தார். பின் இந்த டாஸ்கில் பங்கேற்க மாட்டேன் என்றும் அடம் பிடித்தார். பின் கஸ்தூரி மன்னிப்பு கேட்கும் வரை பிடிவாதம் பிடித்த அவர், மன்னிப்பு கேட்ட பின் சமாதானம் ஆனார்.