என் வாழ்க்கை வரலாறில் நடிக்க தயார்….. இளையராஜா கருத்து…!!

சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக
 கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார்.
Related image
இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா? என்று கேட்டனர். அப்போது இளையராஜா கூறியது என்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன்.
Image result for இளையராஜா
இசையமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தான் இசையமைத்த பாடல்களை இளையராஜா பாடினார். இதனால் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆரவாரம் செய்து அவரை வியப்பில் ஆழ்த்தினார்.