சுந்தர்.சி இயக்கும் படத்தில் தீவிரவாதி கதாபாத்திரத்தில் வேதாளம் பட வில்லன் நடிக்க இருக்கிறார்.
தமிழகத்தின் முன்னனி நடிகரான விஷால் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வேதாளம் படம் வில்லன் கபீர் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் இவரது கதாபாத்திரம் ஹைலைட்டாக இருக்கும் என்றும் இதில் ஒரு தீவிரவாதியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது . இது குறித்து பேசிய கபீர் சிங் பேட்டி ஒன்றில் இப்படத்தின் கதையை சுந்தர்.சி என்னிடம் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என்றும் விஷால் மற்றும் சுந்தர்.சி மீது எனக்கு நல்ல மரியாதை உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் படத்தில் தான் ஒரு எதிரிநாட்டு தீவிரவாதி வேடத்தில் நடித்து வருவதாகவும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பதற்கு சில தீவிரவாதிகள் கதைக்களம் கொண்ட படங்களை பார்த்து தன்னை தயார் செய்து கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .