மனைவியின் கண்முன்னே அடித்து கொலை… சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட கள்ளகாதலன்… வசமாக சிக்கிய கணவன், மனைவி… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தை ஒருவரைக் கொன்று சாக்கு பையில் எடுத்து சென்ற கணவன், மனைவி போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் தேவேந்திர சிங் என்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தேவேந்திரன் வெளி இடங்களுக்கு சென்ற சமயத்தில் சாயாக்கும் மனோஜூக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது கள்ள காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து தேவேந்திர சிங் வெளியே சென்ற சமயத்தில் அவரது வீட்டிற்கு சென்ற மனோஜ் சாயாவிடம் உனது கணவரை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு எனவும், இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு சாயா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த மனோஜ் நாம் இருவரும் எடுத்த புகைப்படங்களை உனது கணவரிடம் காட்டி விடுவேன் என சாயாவை மிரட்டியுள்ளார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த தேவேந்திரன் வீட்டுக்கு திரும்பிய போது, தனது மனைவியுடன் மனோஜ் இருப்பதை பார்த்து கோபத்தில் மனோஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு தனது வீட்டில் இருந்து சுத்தியலால் மனோஜை சாயாவின் கண்முன்னே பயங்கரமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் மனோஜின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி யாருக்கும் தெரியாமல் அதனை அப்புறப்படுத்த முடிவு செய்து அதிகாலை இரண்டு மணி அளவில் மோட்டார் சைக்கிளில் திருவெள்ளைவாயில் வழியாக குப்பைமேடு கிராமத்திற்கு அந்த சாக்குப்பையை எடுத்து சென்றுள்ளனர். அப்போது போலீசார் வேகமாக சென்ற அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சி செய்தும், அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று வாயலூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி விட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த சாக்குமூட்டையில் சோதனை செய்தபோது, அதில் பிணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பின்  போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் தேவேந்திரன் மனோஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவன் மனைவி இருவரையும் கைது செய்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *