ராஸ்கல் மண்டையை ஒடச்சிடுவேன்! யாருடா நீ? கடும் ஆவேசமடைந்த சீமான் ..!!

கடந்த 2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொருளாதார அடிப்படையை இட ஒதுக்கீடு கொடுக்கும்போது,  முன்னேறிய வகுப்பினர், முன்னேறிய சாதியினர் என்று சொல்லுவது.  ஜாதி எப்படி முன்னேறும் ?  சாதிய முற்படுத்தப்பட்ட ஜாதி என்று சொல்ல நீ யாரு ? தேசத்தின் குடிகள் ஆன என்னை நீ முற்படுத்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்ல நீ யாரு ?

அவன் தான் முற்படுத்தப்பட்டு விட்டான் அல்லவா என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் பேசுவதை கேட்ட சீமான், உனக்கு என்ன பிரச்சனை ? அடிப்படையில் உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. நான் சொல்றத உள்வாங்கி பேசு என தெரிவித்தார். நீ தான் பெரிய முன்னேறின வெங்காயமாச்சே. நீ பிசி, எம்சிக்கு வா என பேசிய அவர், நான் அங்கே தான் இருப்பேன். நான் முற்படுத்தப்பட்ட வகுப்பாதான் இருப்பேன் என தெரிவித்தார்.

யோவ் நீ கேக்குறது இல்ல ? நீ யாரு ? நீ முதல்ல காதுல பஞ்ச வச்சு படுத்துகிட்டு… பேசவில்லை என்று பேசிட்டு இருக்குற. கேக்கலன்னா கேக்கலைன்னு சொல்லு. என்ன பேசுற ? என்ன மரியாதையா பேசுற நீ? பேசவே இல்லைன்னு சொல்ற என ஆவேசமான சீமான், கோபத்தின் உச்சிக்கு சென்று ஏய் மண்டைய ஒடச்சிடுவேன் ராஸ்கல் என  பத்திரிக்கையாளரை ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *