கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலமுடிமன் கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த வாரம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அனு கோபித்துக்கொண்டு பரும்பூரிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனமுடைந்த அனு வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அனுவின் உடலை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *