இந்திய ஜனநாயக கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பச்சைமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார்

மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் களும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அறிக்கைகள் வெளியாகின

இதனைத்தொடர்ந்து தேர்தல் கொண்டாட்டமானது நாடு முழுவதும் பரபரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனையடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் மெகா கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது தற்பொழுது  கூட்டணியில் இருக்கக்கூடிய தோழமை கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள் என்பதை தொகுதி பங்கீடு அடிப்படையில் பிரித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

இதனையடுத்து இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது இதனையடுத்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சைமுத்து அவர்கள் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் பெரம்பலூர் தொகுதியில் போனமுறை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றதாகவும் அந்த தொகுதி ஏற்கனவே எனக்கு அறிமுகமான தொகுதி என்பதாலும் இம்முறை அதே தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்தார்

ஏற்கனவே அறிமுகமான தொகுதி என்ற ஒரு காரணத்தினால் அதே தொகுதியில் உதயசூரியன் சின்னத்தை வைத்து போட்டியிட்டால் எங்களுக்கு மேற்கொண்டு பலம் சேரும் இந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் கண்டிப்பாக இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்