என்னடா ஆசிரியர் எப்ப பார்த்தாலும் நம்மையே திட்டிகிட்டே இருக்கிறார் என்று ஆத்திரம் கொள்ளும் அல்லது கொண்ட மாணவர்களா நீங்கள். அப்ப இந்த கதை உங்களுக்குத்தான் உளி படாத கல் சிற்பம் ஆகாது என்பதைப்போல ஆசிரியரிடம் திட்டு வாங்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற கருத்தை உள்வாங்கிக்கொண்டு கதைக்குள் செல்லலாம் வாங்க.

ஒரு ஊரில் சுப்பையா என்னும் வாத்தியார் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வந்துள்ளார். அந்த ஊரிலேயே நன்றாக சொல்லித்தரும் ஆசிரியர்களுள் அவரும் ஒருவர். அவரிடம் திட்டு வாங்காத மாணவர்களே இல்லை. படிப்பில் சிறு பிழை விட்டால் கூட ஆத்திரம் கொண்டு மாணவர்களை திட்டி தீர்ப்பார். அந்தவகையில் ரங்கன் என்னும் மாணவன் அவரிடம் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். ரங்கனுக்கு சுட்டுப்போட்டாலும் படிப்பே வராது அடிக்கடி ஆசிரியரிடம் மக்கு மக்கு என்று திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார்.
ஒரு நாள் காலாண்டு தேர்வு முடிவு வெளியாக வகுப்பறையில் முடிவுகளை வெளியிடும் பொழுது ரங்கனை அழைத்து போன முறையாவது ஒரு படத்திலாவது தேர்ச்சி பெற்றிருந்தாய் இந்த முறை அதிலும் தோல்வி அடைந்து விட்டாய் உண்மையில் உனது மண்டையில் மூளை இருக்கிறதா இல்லை களிமண் இருக்கிறதா என்று கேட்டதோடு, இனிமேல் நீ மக்கு ரங்கன் என்றுதான் இந்த வகுப்பறையில் அழைக்கப்படுவாய் என்று கூறினார்.
அதன்படி நாள்தோறும் மக்கு ரங்கன் என்றே வாத்தியார் அழைத்து வந்தார். பின் அந்த மாணவன் எட்டாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் காலங்கள் ஓடின. வாத்தியாரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று தனது மகனுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இதையடுத்து அவருக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதியத்தை எடுக்க வங்கிக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அதன்படி வங்கிக்கு செல்லும் பொழுது அங்கே அவரது மாணவன் ரங்கன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
இவன் எப்படி இங்கே பணி புரிகிறான் என்று யோசித்தவாறே அவனை பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றார். ஆனால் அவரை கவனித்து விரைந்து வந்த ரங்கன் வாத்தியாரிடம் சென்று என்னை தெரிகிறதா நான் தான் உங்களது மக்கு ரங்கன் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டான். பின் நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணமே நீங்கள் தான் முதன் முறை நீங்கள் என்னை மக்கு என்று அழைக்கும் பொழுது எனக்கு கோபம் வந்தது.
ஆனால் நாளுக்கு நாள் செல்லச் செல்ல அந்த கோபத்தை வைராக்கியமாக கொண்டு வெறித்தனமாக படித்து வாழ்க்கையில் முன்னேறி உள்ளேன். நான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அடித்தள ஏணியாக இருந்தது உங்களுடைய சொற்கள் தான். உங்கள் சொற்களை ஏணியாக மாற்றிக் கொண்டு வாழ்வில் சரசரவென ஏறி முன்னேறி விட்டேன் என்று பெருமிதமாகக் கூறினார். வாத்தியாரும் அந்த மாணவனை எண்ணி பெருமிதம் கொண்டார்.