வாழ்க்கையை நினைத்தால்…. சோகமும்,பயமும் உருவாகிறது…. பிரபல பாலிவுட் நடிகை வருத்தம்…!!

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே வாழ்க்கையை நினைத்தால் சோகமும், பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ஓடிடியில் “தாண்டவ்” என்ற வெப் சீரிஸ் வெளியானது. இந்த தொடரில் இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது, “நாம் செய்யும் ஒரு செயலுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கள் உருவாக்கும்போது அதற்கான சுதந்திரத்திற்கும், சகிப்புத் தன்மைக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும். நமது வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கிறது. அதை நினைத்தால் சோகமும், பயமும் வருகிறது” என்று கூறியுள்ளார்.