வீட்டை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவோம்… மிரட்டல் விடுத்த நபர்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள வெங்கடசமுத்திரம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக தனசேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய வீட்டில் கடந்த 26 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் வீட்டு உரிமையாளர் மாணிக்கம் வீட்டை புதுப்பித்து வைத்துக் கொள் விற்பதாக இருந்தால் உனக்கே விற்கிறேன் என தனசேகரனிடம் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய தனசேகரன் லட்சக்கணக்கில் செலவு செய்து வீட்டை புதுப்பித்துள்ளார்.

ஆனால் மாணிக்கம் வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்கு முன்பணம் வாங்கிவிட்டேன். வீட்டை காலி செய்து விடு என கூறியுள்ளார். இதற்கு நான் வீட்டை காலி செய்ய முடியாது நிறைய பணம் செலவு செய்துள்ளேன் என தனசேகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக இருவரும் வழக்கு தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சம்பவத்தன்று தனசேகரன் அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது சிலர் தனசேகரனிடம் சென்று வீட்டை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவோம்  என மிரட்டியுள்ளனர். இது குறித்து தனசேகர் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் நான்கு பேர் மீதும் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.