“உஷார்” பிப்- 8 க்குள் இத செய்யலானா…. உங்க கணக்கு நீக்கப்படும்…. Whats App அதிரடி…!!

வாட்ஸ் அப்பின் சேவை மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் வாட்ஸ் அப் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. மேலும் அது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை வாட்ஸ் ஆப்பிள் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. இதையடுத்து வாட்ஸ் அப்பில் சேவை மற்றும் விதிமுறைகளை வரும் 2021 ஆம் வருடம் update செய்யப்போவதாக அந்நிறுவனம் கூறியது. அதன்படியே வாட்ஸ்அப் இந்த வருடம் ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

வாட்ஸ் அப்பில் terms and privacy policy updates- ஐ கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கு நீக்கப்படும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியாக கூறியுள்ளது. மேலும் இது பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக WABetaInfo வெளியிட்டுள்ள அறிகையில், புதிய விதிமுறைகளை பயனர்கள் ஏற்காவிட்டால் அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்பட்டு விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனர்களின் சாட்டுகளை சேமிக்கவும் பேஸ்புக்கில் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளது. எனவே நீங்கள் வாட்ஸ் அப்பை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமானால் அடுத்த வருடம் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளுக்கு Must Agree என்பதை கிளிக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இந்த புதிய நிபந்தனை வரும் 2021 பிப்ரவரி-8 ம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *