“அவர் சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு உலக கோப்பை கிடைக்க வாய்ப்பு” – ஆஸி முன்னாள் கேப்டன்..!!

விராட் கோலி சிறப்பாக விளையாடினால்  இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக  ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து  தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரிக்கி பாண்டிங் உலக கோப்பை குறித்த பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார்.

Image result for Ricky Ponting

அப்போது அவர் இந்திய அணியை பற்றி தெரிவித்த போது  உலக கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Image result for virat

மேலும் இந்தியா அணி உலக கோப்பையில் மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் அதில்  எந்த விதமான  சந்தேகமும்  இல்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்திய அணி உலக கோப்பையில்  அரையிறுதிக்கு உறுதியாக  செல்லும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.