வாக்கு கேட்டால் கேள்வி கேட்கிறார்கள்….. காரை நிறுத்தாமல் சென்ற M.P… வைரலாகும் வீடியோ…!!

மக்கள் சரமாரி கேள்வி கேட்டதால் வாக்கு கேட்க கிழே இறங்காமல் தம்பிதுரை MP சென்ற வீடியோ வைரலாகி வருகின்றது.

மக்களவை தேர்தலில் வேட்பாளர் பட்டியல் வெளியாகியதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான அணியும் பிரதான கட்சிகளாக களத்தில் இருக்கின்றன.அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதிக்கட்சி மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது.

தம்பிதுரை MP க்கான பட முடிவு

தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பரப்புரையை முன்னெடுத்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் ஏற்கனவே MP-யாக இருக்கும் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுகிறார். இவர் மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற போது பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால்  , தம்பிதுரை காரை விட்டு கீழே இறங்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது . ஏற்கனவே செல்லூர் ராஜீ மதுரையில் வாக்கு கேட்ட போது உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறி விரட்டியடித்த வீடியோ_வும் சமூக வலைதளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.